தமிழ்நாடு மின் வாரியத்தில், 2,900 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் !!

தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள, உதவிப் பொறியாளர், இளநிலை உதவியாளர் பணிக்கு மற்றும் கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக மின் வாரியத்தில் 400 மின்னியல் உதவி பொறியாளர், 125 இயந்திரவியல் உதவி பொறியாளர், 75 கட்டடவியல் உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த 15 -ம் தேதி விண்ணப்பம் பெறப்பட்டது.

விண்ணப்பதாரர்களுக்கு, ஏப், 24, 25, மே, 1, 2 ஆகிய நாட்களில், கணினி வழி தேர்வு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள், www.tangedco.gov.in என்ற மின் வாரிய இணையதளத்தில் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.மேலும், 500 இளநிலை உதவியாளர் மற்றும் கணக்கு பதவிக்கு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த பதவிக்கு, மே, 8, 9, 15, 16 ஆகிய நாட்களில், கணினி வழி தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக கூடுதல் தகவலுக்கு விண்ணப்பதாரர்கள், மின் வாரிய இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும்.அத்துடன், கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்படுகிறது.

அதாவது, தமிழ்நாடு மின் வாரியத்தில், 2,900 கள உதவியாளர் பயிற்சி பணியிடங்கள், நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கு, மார்ச் மாதம் இணையதளம் வழியே, விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக, விண்ணப்பம் பெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், கள உதவியாளர் பயிற்சி பணியிடத்திற்கான விண்ணப்பங்கள், இணையதளம் வழியே, வரும் 15 -ம் தேதி முதல் மார்ச், 16 -ம் தேதி வரை பெறப்படும் என்றும் கூடுதல் தகவலை www.tangedco.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது