உங்கள் மொபைல் போனை சார்ஜ் செய்யும் போது இந்த தவறை எல்லாம் செய்யாதீங்க..! சீக்கிரம் பேட்டரி போயிரும்..!

உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரி ஆயுள் நீடிக்க சில சார்ஜிங் டிப்ஸை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு மொபைல் போனிற்கு முக்கிய உயிர்நாடி பேட்டரி தான். போனின் நீடித்த ஆயுளுக்கு தரமான பேட்டரி அவசியம். இந்த பேட்டரிகளை மேம்பட செயல்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிப்பது சார்ஜிங் முறை தான். சார்ஜிங் போது நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட மெதுமெதுவாக பேட்டரியின் வாழ்நாளை குறைத்து மொபைல் போன்களை விரைவில் செயலிழக்க செய்யும்.

ஆகவே நாம் அன்றாடம் செய்யும் சில சார்ஜிங் முறை தவறுகளை எப்படி தவிர்ப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.

முதலில் 0% முதல் 100% என சார்ஜிங் செய்வதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி பேட்டரி அளவு 5% க்கு கீழ் வருவது உங்கள் பேட்டரியை வீணடிக்கும். அதே போல் ஒவ்வொரு முறையும் 100% சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, நீங்கள் அதை 80% சார்ஜ் ஆன பின் ஆப் செய்யலாம். பேட்டரி அளவு 30% க்கு குறைந்தவுடன், சார்ஜ் செய்வது நல்லது.

சார்ஜ் போட்டுக்கொண்டே வேலை செய்வது, கேம் விளையாடுவது போன்ற வசதிகள் இருந்தாலும் அது உங்கள் போனின் பேட்டரியை விரைவில் கெடுக்கும். ஸ்மார்ட்போன் எப்போதும் 45°C ஐ விட அதிக சூடாக இருக்கக்கூடாது. நீங்கள் சார்ஜ் போட்டு கொண்டே பல வேலைகள் செய்வது உங்கள் மொபைலை சூடாக்கும். அதே போல் நேரடியாக சூரிய ஒளிப்படும்படி வைக்க கூடாது.

பெரும்பாலும் பகல் முழுவதும் பயன்படுத்தும் உங்கள் ஸ்மார்ட்போனிற்கு இரவு தான் ஓய்வு கிடைகிறது. அப்போதும் படுக்க செல்லும் முன்பு சார்ஜில் போட்டு விட்டு காலை வரை ஆப் செய்யாமல் வைத்திருப்பது உங்கள் ஸ்மார்ட்போன் எப்போது வேண்டுமானாலும் செயலிழக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

ஸ்மார்ட் போன் தற்போதைய தொழில்நுட்ப வாழ்வில் ஒரு அங்கம் தான் என்றாலும் அதனை தேவைக்கு ஏற்றார்போல் மட்டும் பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம்