தொழிலாளர் உதவி கமிஷனர் பதவிக்கான எழுத்து தேர்வு 6 மாவட்டங்களில் நடந்தது

தொழிலாளர் உதவி கமிஷனர் பதவிக்கான எழுத்து தேர்வு 6 மாவட்டங்களில் நடந்தது

தொழிலாளர் உதவி கமிஷனர் பதவிக்கான எழுத்து தேர்வு 6 மாவட்டங்களில் நடந்தது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 12.1.2018 அன்று தமிழ்நாடு தொழிலாளர் சேவைத்துறையில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் பதவிக்கான காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

மொத்தம் காலியாக உள்ள 10 இடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

கடந்த 11.2.2018 அன்று விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும். அதன்படி, தமிழகத்தில் 5 ஆயிரத்து 849 பேர் இந்த பதவிக்காக விண்ணப்பித்து இருந்தனர்.

அதில் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாதது உள்பட சில காரணங்களுக்காக 1,177 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 4 ஆயிரத்து 672 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் தொழிலாளர் உதவி கமிஷனர் பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி மற்றும் நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களில் விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதினார்கள்.

காலை சமூக அறிவியல் மற்றும் தொழிலாளர் சட்டம் தொடர்பான தேர்வும், பிற்பகலில் பொது பாடம் தொடர்பான தேர்வும் நடந்தது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது.