ஹேர் டை உபயோகம் செய்தால் ஏற்படும் பாதிப்பு..!

முகத்தில் பூசப்படும் பவுடரை போன்று, தலைமுடியில் அடிக்க பயன்படும் ஹேர் டையும் சாதாரண அலங்காரப்பொருள்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், நடுத்த வயதில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் இது வரப்பிரசாதமாக மாறியுள்ளது.

ஆனால், ஹேர் டையில் உபயோகம் செய்யப்படும் இரசாயன கலவைகளால் தலைமுடி உதிர்வது, எரிச்சல் போன்ற பின்விளைவுகள் ஏற்படும். இவ்வாறான பட்சத்தில் மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை மேற்கொள்வது நல்லது.


ஹேர்டையை பயன்படுத்துவதற்கு முன்னதாக, சிறிய அளவில் உபயோகம் செய்து அலர்ஜி அல்லது எரிச்சல் ஏற்படுகிறதா? என்று சோதனை செய்துகொண்டு பின்னர் உபயோகம் செய்யலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகை ஹேர் டைகளை உபயோகம் செய்யலாம்.