M.SC முடித்தவர்களுக்கு 85 காலிப்பணியிடங்கள் – சென்னை பல்கலைக்கழக அறிவிப்பு !!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள Post Doctoral Fellow & Project Fellow பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பணிகளுக்காக வரையறுக்கப்பட்ட தகுதிகள் மற்றும் ஏனைய தகவல்களை கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். திறமையானவர்கள் விரைவாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்

நிறுவனம்University of Madrasபணியின் பெயர்Executive Traineeபணியிடங்கள்85கடைசி தேதி01.03.2021விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்

பல்கலைக்கழக பணியிடங்கள் :

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Post Doctoral Fellow & Project Fellow பணிக்கு என 85 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

UNOM கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடையாய் பாடங்களில் M.SC/ M.Phil/ PH.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Madras University ஊதிய விவரம் :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

UNOM தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 01.03.2021 அன்றுக்குள் பதிவாளர், மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை 600 005 என்ற முகவரிக்கோ அல்லது c3section.uom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

UNOM Recruitment PDF – NOTIFICATION I | NOTIFICATION II