தசை பிடிப்பு என்பது நமது உடலில் இருக்கும் தசைகள் சோர்வாக இருப்பதை காட்டும் ஒரு வழி. தசை பிடிப்பு உங்களுக்கு ஏற்படுகிறது என்றால் உங்கள் உடலில் இருக்கும் முக்கியமான தாதுக்களில் குறைப்பாடு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது.
உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது நடக்கும்போதோ தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் நமது உடலில் கால்சியம், சோடியம் அல்லது பொட்டாசியம் சத்துக்கள் இல்லாத காரணத்தாலும் தசைப்பிடிப்புகள் ஏற்படுகிறது. உடல் பாகங்களில் குறைந்த அளவிலான இரத்த வழங்கல் காரணமாகவும் தசைப்பிடிப்பு ஏற்படும்.
இதை குறித்து ஊட்டச்சத்து நிபுணரான சோப்ரா கூறும்போது “தசைப்பிடிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. இதை சரி செய்ய நீர்மிக முக்கியம். வைட்டமின், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது மூலமாகவும் தசை பிடிப்புகளில் இருந்து விடுபடலாம்.
இந்த உணவுகள் சாபிடுவதால் அவைகள் உடலில் எலக்ட்ரோலைட்டுகளாக செயல்ப்படுகின்றது. அதன் காரணமாக தசையின் செயல்ப்பாடு மேம்பாடு அடைகிறது” என்று கூறுகிறார்.
இப்போது தசைப்பிடிப்பை சமாளிக்க உதவும் சில எளிய உணவு வகைகளை..
வாழைப்பழங்கள், இது எல்லா சீசனிலும் கிடைக்கும் ஒரு பழம். இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளது. அதனால் இது தசை பிடிப்பை தடுக்க அவசியமான எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையை பராமரிக்க உதவும்.
சர்க்கரை வள்ளி கிழங்கு அல்லது உருளை கிழங்கு, இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபைபர், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய பல சத்துக்களை அதிகமாக உள்ளது. அதனால் இது தசைப்பிடிப்பை தடுக்க உதவுகிறது.
தர்பூசணி, தசைப்பிடிப்புக்கான பொதுவான ஒரு காரணம் நீர் பற்றாக்குறை. ஆனால் இந்த பழம் சாப்பிடுவதால் உடலில் போதுமான அளவில் நீர் இருக்கும். அதனால் தசை பிடிப்பு சரியாக உதவி செய்கிறது.
பால், இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் அதிகமாக உள்ளது. மேலும் இதில் புரதமும் அதிகமாக நிறைந்துள்ளது. அதனால் இவை தசைகளை சரிசெய்ய உதவுகிறது.