வயிற்றுப் புண்ணை சரி செய்ய இதை கடைபிடியுங்கள்

வயிற்றுப்புண் என்றால் இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புண் ஆகும். இதனை சூலை நோய் எனவும் அழைக்கப்படுகின்றது.

கடுமையான வயிறு வலி,வயிற்றில் எரிச்சல், இலேசான கார உணவும் அதிக வயிறு வலியை உண்டாக்குதல் என எல்லாமே வயிற்றூப்புண்ணுக்கான அறிகுறிதான்.

நோய் தீவிரமாவதற்குள் கண்டறிந்துவிட்டால் அதிலும் ஆரம்ப கட்டத்தில் கவனித்தால் கை வைத்தியம் மூலம் சரி ஆகிவிடும்.

அந்தவகையில் தற்போது வயிற்றுப்புண்ணை குணமாக்க கூடிய ஒரு சூப்பரனா மருந்து ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தேவையானவை

ஓமம் – 100 கிராம்
சுக்கு – 200 கிராம்
அதிமதுரம் – 400 கிராம்

செய்முறை

சுக்கை சுத்தம் செய்து அதன் தோலை நீக்கவும்.

சுக்கை இடித்து பிறகு ப்ளெண்டரில் சேர்த்து பொடியாக்கவும். அதிமதுரம் சுத்தம் செய்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி வைக்கவும். இந்த மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

தினமும் மூன்று வேளை உணவுக்கு முன்பு ஒருகிராம் இந்த பொடியை தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் புண் தீவிரமாகாது. எரிச்சலும் குறையும்.

நன்மைகள்

வயிற்றுக்கோளாறுகளை சரி செய்யகூடும். ஓமத்தில் இருக்கும் தைமோல் வயிற்றின் செரிமான திரவ சுரப்ப்புக்கு உதவுவதால் அது செரிமான செயல்பாட்டை சீராக்க செய்யும். அஒம விதைகள் வயிற்றுக்கு இதமளிக்க செய்யும். இது வயிறு வலி, வயிற்றுப் பொருமல்,வயிறு உப்புசம், செரிமானக்கோளாறுகளு உட்பட வயிற்று பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அஜீரணக்கோளாறுகளை ஏற்படுத்தும் வயிற்று வலி மற்றும் அசெளகரியம் நீக்க சுக்கு பயன்படுகிறது. சுக்கு வாய்வுத்தொல்லயை நீக்க செய்யும். வயிற்றுப்பொருமலை போக்க செய்யும். இது குடலையும் உணவுப்பாதையையும் சுத்தம் செய்வதால் வயிற்றுப்புண்ணின் தீவிரம் அதிகரிக்கமல் இருக்கும்.

அதிமதுரம் இது தொண்டைப்புண்ணுக்கு மட்டும் அல்லாமல் வயிற்றுப்புண்ணுக்கும் காயம் ஆற்றக்கூடியவை. வயிறு புண்கள், இரைப்பை புண்கள் மட்டும் அல்லாமல் சிறுகுடலின் ஆரம்ப நிலை பகுதியான புண்களுக்கும் இவை மருந்தாகிறது.

​குறிப்பு

அல்சரை அதிகரிக்க செய்யும் உணவுகளை தவிர்ப்பதும் அவசியம்.அல்சராக இல்லாமல் அது மோசமான உணவின் காரணமாக வயிற்றில் புண்ணை உண்டாக்கியிருக்கலாம்.

இந்த மருந்துகள் எடுத்துகொள்ளும் போது துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. அதே பொன்று அதிகம் இனிப்பு, அதிக காரம், அதிக புளிபு நிறைந்த உணவுகளும் வயிற்று புண்ணை அதிகரிக்க செய்ய கூடும். கீரைகள் மென்மையான உணவுகள் போன்றவை சேர்க்கலாம்.

உணவை மொத்தமாக எடுக்காமல் சிறிது சிறிதாக எடுத்துகொள்ள வேண்டும். சாப்பிட்ட உடன் படுக்கவும் கூடாது. அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால் வயிற்றுப்புண் நிச்சயம் குணப்படுத்தலாம்.