கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் மற்றும் ஆபத்துகள்

பழங்களிலேயே விலை குறைவானதும், மிகுந்த சத்து உடையதும் உள்ளது கொய்யாப் பழம். இதில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் உடையது. இதை வெட்டி சாப்பிடுவதை விட நன்றாக கழுவிய பிறகு பற்களால் நன்றாக மென்று தின்பதே நல்லது. வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.

அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.

இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். சாப்பிடுவதற்கு முன்பு இந்த பழத்தை சாப்பிடுவது நல்லது அல்ல. சாப்பிட்ட பிறகு அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.

இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் இருமல் இன்னும் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் தோல் நோய் அதிகரிக்கும். இதற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் இருக்கிறது. ஒரு சில மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய் ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது சாப்பிட்டால் வயிறு வலியை ஏற்படுத்தும்