கொழுப்பு கட்டி மற்றும் மூட்டுவலியை குறைக்கும் இயற்கை மருத்துவம்!!!

நம் உடம்பில் எங்காவது மேலே கட்டிபோல் காணப்படும். அது கொழுப்பு காட்டித்தான். இதற்கு பயப்பட தேவை இல்லை.அறுவைசிகிக்சை எல்லாம் செய்யத்தேவை இல்லை. இதனை ஒரு இலையை வைத்தே கரைக்கலாம். கட்டியை மட்டும் அல்ல மூட்டுவலியையும் குறைகிறது.


நம் வீட்டின் ஓரத்திலும் அல்லது குப்பைகள் உள்ள இடங்களிலும் அதிகமாக துத்திஇலை காணப்படும். இந்த இலையை பறித்து ஒரு ஐந்து இலை எடுத்து அதன் மேல் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் சூடுசெய்து கொழுப்பு கட்டி உள்ள இடத்தில் துணியை கொண்டு கட்டவேண்டும். இப்படி செய்தால் கொழுப்பு கட்டி தன்னால் கரைந்துவிடும்.
துத்திஇலையையும் அதன் பூவையும் அரைத்தும் கைகளில் கட்டலாம். சிலருக்கு சூடு தாங்காது அதனால் இவ்வாறு செய்யலாம்.
இது கொழுப்பு கட்டிக்கு மட்டும் இல்லாமல் வேறு கட்டிகளுக்கும் இந்த முறையை பின்பற்றலாம்.