வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்ற வேண்டுமா..? சிம்பிள்.. நீங்களே மாற்றலாம்..!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் இருந்தால் அதனை ஆன்லைன் மூலமே மாற்றிக் கொள்வது எப்படி என்ற படிநிலை வெளியிடப்பட்டுள்ளது.முதலில் https://www.nvsp.in என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும். அதில் “உள்நுழைவு / பதிவு” என்று சொல்லும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.முதன்முதலாக இதில் உள்நுழைவோர் உங்கள் மொபைல் எண்ணை கொண்டு ரிஜிஸ்டர் செய்து விட்டு உள்நுழையலாம்.

உங்களில் சரியான கடவுச்சொல்லை போட்டதும் நீங்கள் அடுத்த பக்கத்திற்கு செல்லலாம்.பின்னர் உங்கள் அடையாள அட்டையில் குறிப்பிட்டுள்ள EPIC எண்ணை பதிவிடவும். பின்னர் முகவரியை மாற்ற விரும்பினால் “வேறொரு இடத்திற்கு இடம்பெயர்வு” விருப்பத்தை கிளிக் செய்யவும்.

அடுத்து பொருத்தமான விவரங்களைத் தேர்வு செய்து, உங்கள் புதிய முகவரி உங்கள் வாக்காளர் அடையாள அட்டை உங்கள் தொகுதிக்கு வெளியே இருந்தால், “உங்கள் தொகுதிக்கு வெளியே இடம்பெயர்வு” (“Migration outside your constituency” என்பதைக் கிளிக் செய்யவும். ஆனால் உங்கள் புதிய முகவரி அதே தொகுதியில் இருந்தால், “உங்கள் தொகுதிக்குள் இடம்பெயர்வு” (Migration within your constituency”) என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் விவரங்களை நீங்கள் புதுப்பிக்க முடியும்.

6 பக்க அளவிலான இந்த படிவத்தில் அனைத்து விவரங்களையும் கட்டாயம் இணைக்க வேண்டும். இதற்கு தேவையான சான்றுகளையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்து சமர்ப்பி என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு ஓடிபி பெறுவீர்கள். உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.