கண் நரம்புகள் வலுவடைந்து, ரத்த ஓட்டம் சீராக செயல்பட இந்த காயை சமைத்து சாப்பிடுங்க!

நாம் அவரைக்காய் என்று அழைத்தாலும், அது உண்மையிலேயே ஒரு பீன்ஸ்/பட்டாணி வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். மனிதன் முதன் முதலாகப் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காயும் ஒன்று என்று கூறப்படுகிறது. கோடைக்காலப் பயிராகக் கருதப்படும் அவரைக்காயின் சீசன் பிப்ரவரி முதல் ஜூலை வரை ஆகும். ஆனாலும் அதைக் காய வைத்து, குளிர்காலத்திலும் பயன்படுத்துவார்கள். கிட்னி வடிவத்தில் இருக்கும் ஒவ்வொரு விதையின் மேற்புறம் பஞ்சு போல மென்மையாக இருக்கும். 

அவரைக்காய் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் கொண்டது. நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அவரையில் உள்ளன. நாம் உண்ணும் உணவில் அவரைக்காய் சேர்த்து கொண்டால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவரைக்காய் உண்பது நல்லது. 

உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், அதிகளவில் உணவில் அவரைக்காயை சேர்த்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து விடும். அவரைக்காய் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் கொண்டது. நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அவரையில் உள்ளன. 

கண் நரம்புகள் 

அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும். 

சக்கரை நோய் 

சக்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும். 

ரத்த ஓட்டம் 

ரத்த ஓட்டம் சிறப்பாக அமைய தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ளன. இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து, சர்க்கரையின் அளவை கட்டு படுத்தும். 

உடல் ஆரோக்கியம் 

உடலுக்கு ஆரோக்கியத்தை தர கூடிய அனைத்து விட்டமின்கள் கொழுப்பு சத்துக்கள் அடங்கி உள்ள அவரைக்காயை உணவில் எடுத்து கொள்ள பசியை கட்டு படுத்தும் தன்மை கொண்டது. 

சுவாச பிரச்சனைகள் 

ஆஸ்துமா, பிராங்கட்டிஸ் போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய் சிலருக்கு ஏற்படுகிறது. மேலும் ஜுரம் ஏற்படுவதால் சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் இரும்பு சத்து நிறைந்துள்ள அவரைக்காய்களை தினமும் சாப்பிடுவதால் நுரையீரலுக்கு அதிகம் பிராணவாயு கிடைத்து சுலபமாக சுவாசிக்க முடிகிறது. 

பற்கள், எலும்புகள் 

உடலுக்கு “கால்சியம்” சக்தி மிகவும் அவசியமாகும். இந்த கால்சியம் சக்தி தான் உடலின் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானதாக இருக்கிறது. அவரைக்காய்களில் இந்த கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.