பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்… என்எம்டிசி நிறுவனத்தில் வேலை

இந்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் என்எம்டிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Executive Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 03/2020

பயிற்சியின் பெயர்: Executive Trainee

பிரிவு: Electrical
காலியிடங்கள்: 10

பிரிவு: Materials Management
காலியிடங்கள்: 25

பிரிவு: Mechanical
காலியிடங்கள்: 14

பிரிவு: Mining
காலியிடங்கள்: 18

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 2 7 வயதிற்குள் இருக்க வேண்டும்

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.50,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2021 தேர்வு பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.nmdc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட்அவுட் எடுத்து பூர்த்தி செய்து அதனுடன் புகைப்படம் ஒட்டி சுய சான்றொப்பம் செய்த அனைத்து நகல்களுடன் GATE-2021 அட்மிட் அட்டையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Post Box No:1382
Post Office, Humayun Nagar, Huderabad, Telangana State – 500 028

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2021

மேலும் விவரங்கள் அறிய www.nmdc.co.in அல்லது https://jobapply.in/nmdc2021gate/Adv_Eng.pdf என்ற லிங்கில் சென்று பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.