வீட்டில் இருந்தபடியே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை மிக எளிமையாக தெரிந்துகொள்ளலாம்.

வீட்டில் இருந்தபடியே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை நீங்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம். லேப்டாப் அல்லது மொபைல் மூலமாக இதனை கண்டறியலாம். அதன்படி உங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் உங்கள் பெயர் இருக்கிறதா என அறிந்து கொள்ளலாம் அல்லது இரண்டாவது வழிமுறையில் வாக்காளர் அட்டையில் இருக்கும் EPIC எண்ணை பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.

EPIC எண் இல்லையெனில்,

Step 1 : தேசிய வாக்காளர் சேவைதளமான NVSP யின் https://electoralsearch.in/ எலக்ட்ரோல் தேடல் பக்கத்துக்குச் செல்லுங்கள் .

Step 2. அதில் Search Your Name in Election poll என்பதை கிளிக் செய்யவும். அல்லது அதில் உங்களின் பெயர், பாலினம், வயது, தொகுதி முதலிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் Captcha படத்தில் இருக்கும் குறியீட்டை உள்ளிடவும். இறுதியாக Enter பட்டனை தட்டவும்.

EPIC எண் இருந்தால்

Step 1 : Search by EPIC No என்பதை கிளிக் செய்யவும்.

Step 2 : உங்கள் EPIC எண்ணை உள்ளிட வேண்டும். அதற்கு கீழே உள்ள மெனுவில் இருந்து மாநிலத்தை தேர்வு செய்து, Captcha படத்தில் இருக்கும் குறியீட்டை உள்ளிடவும். பின்னர் தேடல் என்பதை கிளிக் செய்யவும்.

Step 3 : உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால், தேடல் பட்டனை கீழே காணலாம். எதுவும் தெரியவில்லை என்றால், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று அர்த்தம்.