தீ காயங்கள் ஏற்பட்டால் இதை கடைபிடியுங்கள்

பொதுவாக அவசரமாக டீ குடிக்கும் போது நாக்கு சுடுபட்டு விடும் அதன் பின் சாப்பிடுவதற்கு மிகவும் கஷ்டப் படுவோம்..அப்படி வாய் சுடுபட்டு விட்டால் என்ன செய்வது.? சீனி சிறிதளவு எடுத்து சுடுபட்ட நாக்கில் வைத்துவிடுங்கள்.. சிறிது நேரத்தில் குணமடைந்து விடும். காய்கறிகள் அல்லது ஏதேனும் நறுக்கிக் கொண்டிருக்கும் பொழுது விரல்கள் வெட்டுப் பட்டுவிட்டால் உடனடியாக அந்த இடத்தில் வெஸ்லின் சிறிதளவு தடவி விடுங்கள்.

இரத்தம் நின்றுவிடுவதுடன் இலகுவில் குணமாகிவிடும். தலைவலி தாங்க முடியாமல் போனால் நெத்திப் பொட்டில் அதாவது இமைகளுக்கு நடுவில் ஆட்காட்டி விரலைவைத்து சுமார் ஒரு நிமிடம் வரை அழுத்துங்கள். அப்படி அழுத்தும் போது தலைவலி நின்று விடுவதுடன் உற்சாகமும் பிறக்கும்.

அடுப்படியில், மின்சார அடுப்புகளில் பெண்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது ஏராளமான விபத்துகள் ஏற்படுவதுண்டு..குறிப்பாக தீக் காயங்கள் ஏற்படும், இதற்கு நாம் உப்பு தண்ணீர் அல்லது தேன் பூசுவது வழக்கம். ஆனால் அதை விட சூப்பரான மருந்து ஒன்று உள்ளது.தீக் காயங்கள் பட்டவுடன் அந்த இடத்தில் சிறிது தேன் பூசிவிடுங்கள். அவ்வளவு தான்.. கொப்பளம் வராது அதே நேரம் காயமும் மாறிவிடும் .