தேசிய கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்பு.

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் (NBCC) ஆனது அங்கு காலியாக உள்ள Site Inspector பணிகளுக்கு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள Site Inspector பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பணியிடங்கள் : 

இந்நிறுவனத்தில் Site Inspector (Civil & Electrical) பணிக்கு என 120 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

வயது வரம்பு : 

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

கல்வித்தகுதி : 

அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Civil & Electrical ஆகிய பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். 

மேலும் மேற்கூறப்பட்ட பணியில் குறைந்தபட்சம் 04 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும். 

ஊதிய விவரம் : 

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேர்வு செயல்முறை : 

பதிவு செய்வோர் Computer Based Test (CBT) மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். 

விண்ணப்பக் கட்டணம் : 
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC, ST, PwBD & Departmental விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை. 

விண்ணப்பிக்கும் முறை : 

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.03.2021 அன்று முதல் 14.04.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

Official PDF Notification – https://www.nbccindia.com/pdfData/jobs/AdvertisementNo05-2021_SiteInspector_Civil-Electrical24032021.pdf

Apply Online – https://nbcc.onlineregistrationforms.com/#/home