பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் வேலை

வங்கி வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 150 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 150 

நிர்வாகம்: பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி 

பணி: Generalist Officers 

சம்பளம்: மாதம் ரூ.48,170 – ரூ.69,810 

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது CA, ICWA, CFA, FRM இவற்றில் ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதாவதொரு வங்கியில் 3 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.118 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : www.bankofmaharashtra.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2021 

மேலும் விவரங்கள் அறிய https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/a0ab94ef-0ae6-4e05-8f2b-2b5d0a06c807.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.