புடலங்காயின் மருத்துவ பலன்கள்

நம் முன்னோர்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த உணவுப்பொருட்களில் ஒன்று புடலங்காய். புடலங்காயில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்த காய்கறியை அணைவரும் சாப்பிடலாம். ஆனால் ஆண்களுக்கு ஏற்படும் ஒரு சில நோய்களுக்கு இது உதவும் என்பதால், அவர்கள் குறிப்பாக சாப்பிட வேண்டும். தற்போது அதில் நிறைந்துள்ள சத்துக்கள் குறித்து விளக்கமாக பார்ப்போம்.

1. உடல் குறைந்து காணப்படுபவர்கள் புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்கும்.

2. இதை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆண்மை கோளாறுகள் உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த காய், ஆண்களின் காமத்தன்மையை அதிகரிக்கும்.

3. இந்த காயில், அதிக நார்ச்சத்துகள் இருப்பதால் சீரண கோளாறுகள் நீங்கும் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.

4. புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடுவதால், குடல் புண், வயிற்று புண், தொண்டை புண் ஆகியவை சரியாகும் வாய்ப்பு உள்ளது.

5. மூல நோய் உள்ளவர்களுக்கும் இந்த புடலங்காய் அதிக நண்மைகளை கொடுக்கிறது.

6. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கும் இந்த புடலங்காய், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும்.

7. அதிகம் நீர்ச்சத்து இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

8. கருப்பைக் கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றலும் இந்த புடலங்காய்க்கு உள்ளது.

9. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை இந்த புடல்ஙகாய் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

10. போனசாக இன்னும் ஒரு கூடுதல் தகவல் உள்ளது. அது என்னவென்றால், புடலங்காய் வாங்கும் போது நன்கு முற்றிய காயை வாங்கக்கூடாது. நடுத்தர மற்றும் பிஞ்சு காயை மட்டும் தான் வாங்க வேண்டும். நடுத்தர மற்றும் பிஞ்சு காயில் மட்டும் தான், மேற்கண்ட பாதிப்புகளை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.