தயிருடன் சேர்க்கக்கூடாத உணவுகள் எவை தெரியுமா?

தயிர் இயற்கையான உணவு என்றாலும், இதனுடன் இந்த குறிப்பிட்ட உணவு வகைகளை சேர்த்து சாப்பிட்டால், நமக்கு நன்மைகளைவிட, பக்கவிளைவுகளே அதிகமாகும்.

தயிர், (Curd) இயற்கையிலேயே, அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருள் ஆகும். கால்சியம் (Calcium), வைட்டமின் பி2, வைட்டமின் பி 12, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்டவைகள் தயிரில் மிக அதிகளவில் உள்ளன. தயிர் எளிதில் செரிமானம் அடையக் கூடிய உணவுப்பொருள் ஆகும். தயிரின் இந்த நல்ல குணாதிசயங்களை அறிந்த மனிதர்கள், தயிர் உடன் சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களை கலந்து சாப்பிட்டால், அது நம் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும் எனவே எந்தெந்த உணவுகளை தயிருடன் சேர்ந்து சாபிடக்கூடாது என்று விரிவாக இங்கே காண்போம்.

தயிருடன் வெங்காயம்
உங்களுக்கு தயிர் வெங்காயம் கவும் பிடிக்கும் என்றால், நீங்கள் உங்கள் உணவு பழக்கத்தை முதலில் மாற்றிக்கொள்ளவும். தயிர் என்பது இயற்கையிலேயே, நமது உடலுக்கு குளிர்ச்சி தன்மை. தயிரும் வெங்காயம் கலந்து சாப்பிட்டால் உடல் அரிப்பு, எக்ஸிமா, சோரியாசிஸ் போன்ற குறைபாடுகள் ஏற்பட கூடும்.

தயிருடன் மாம்பழம்
தயிர் உடன், அரிந்த மாம்பழங்களை அதில் கலந்து சாப்பிட்டால் தோல் சம்பந்தமான நோய்கள், உடலின் செயல்பாடுகள் தடைபடுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

தயிருடன் மீன்
தயிர் என்பது புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப்பொருள் ஆகும். அதேபோல் மீனிலும் அதிகளவு புரோட்டீன் சத்து உள்ளது. எனவே தயிருடன் மீன் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படுவதுடன், வயிறு தொடர்பான உபாதைகளும் ஏற்படக் கூடும்.

தயிருடன் பால்
பால் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, உப்பிசம் மற்றும் வாய்வுக் கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்பட காரணமாக அமைந்து விடும்.