ஆதார் கார்டில் உள்ள உங்கள் தொலைபேசி எண்ணை மாற்றம் செய்ய எளிய வழிமுறைகள்!!!

ஆதார் மொபைல் எண் மாற்றம்:

ஆதார் மையம் அல்லது இ-சேவை மையத்திற்கு சென்று இணையம் மூலம் எளிமையாக மாற்றும் வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஆதார் அட்டை மத்திய அரசால் 2009 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் எண் இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனி மனிதனின் அடையாளமாக ஆதார் விளங்குகிறது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் அவசியமானதாகும். அனைத்து துறைகளிலும் பண பரிமாற்றத்திற்கு, வணிகத்திற்கு ஆதார் அவசியமான ஒன்றாகும். ஆதார் அட்டை முதலில் வழங்கும் போது பெயர், பிறந்த வருடம், முகவரி, தொலைபேசி எண், அரசால் வழங்க கூடிய ஆதார் எண் போன்றவை இடம் பெற்றிருந்தது.

பிறகு மத்திய அரசு உங்கள் ஆதார் கார்டில் சுய விவரங்களில் ஏதேனும் மாறுபாடுகள் செய்ய வேண்டும் என்றால் இணையம் மூலம் ஆதார் மையம் அல்லது இ-சேவை மையத்தை அணுகி மாற்றி கொள்ளலாம் என அறிவித்தது. அதன் படி புகைப்படம் மாற்றுதல், முகவரி மாற்றுதல் போன்ற திருத்தங்களை மக்கள் செய்து வந்தனர். தற்போது ஆதார் கார்டில் உள்ள உங்கள் மொபைல் எண்ணை புதுப்பித்து கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது. ஆதார் மூலம் எந்த பணிகளை செய்தாலும் அதன் OTP எண் உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் உங்கள் மொபைல் எண்ணை நீங்கள் மாற்றி இருந்தால் அது பழைய மொபைல் எண்ணிற்கு செல்லும். எனவே நீங்கள் உங்கள் புதிய எண்ணை ஆதார் கார்டில் மாற்றலாம்.

எளிய வழிமுறைகள்:

  • அருகிலுள்ள ஆதார் மையம் அல்லது இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்
    அங்கு ஆதார் சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அந்த படிவத்தில் உங்கள் புதிய மொபைல் எண்ணை சரியாக குறிப்பிட வேண்டும்.
  • அந்த படிவத்தை பூர்த்தி செய்து விவரங்களை சரிபார்த்த பிறகு இ-சேவை மையம் அல்லது ஆதார் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டு புதிய மொபைல் எண் ஆதாருடன் இணைந்து விடும்.