உங்களின் உடல் எடையை குறைக்க இந்த 10 பழங்கள் போதும் !!!!

இன்றைய காலத்தில் பலரும் உடல் எடையை குறைக்க பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றார்கள். உடல் எடையை பற்றிய விழிப்புணர்வு இணையப்பக்கங்கள், சமூக வலைத்தளங்கள் போன்ற பலவற்றில் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றது.

அதனால் பலரும் பல விதமான வழிமுறைகளில் தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர்.

அதில் சிலர் செயற்கையான முறையிலே உடல் எடையை எளிய முறையில் குறைக்க விரும்புகின்றார்கள். இருப்பினும் உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளே சிறந்தது.

நீங்கள் அதிக உடல் எடையை கொண்டிருந்து உடல் எடையை குறைக்க விரும்பினால் உங்களுக்கு பழங்கள் உறுதுணையாக இருக்கும். அப்படி இருக்க கூடிய பழங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

க்ரேப் ஃப்ரூ எடை இழப்புக்கும் உதவகூடும். இதில் வைட்டமின் சி மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த க்ரேப் ஃப்ரூட் காலை உணவுக்கு முன்பாதி பழமும், மதிய உணவுக்கு முன் பாதி பழமும் சாறாக்கி குடிக்கலாம். அதே நேரம் நார்ச்சத்தும் நிறைவாக இருக்க வேண்டும் என்பதையும் கவனியுங்கள்.

தினசரி ஒரு கப் தர்பூசணி எடுத்துகொள்வது நல்லது. இதை மதிய உணவின் போது 1 மணி நேரத்துக்கு முன்பு எடுத்துகொள்ளுங்கள்.

தினசரி எலுமிச்சை சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து வெதுவெதுப்பான நீரை காலையில் தவறாமல் எடுத்துகொள்ளுங்கள். இது உடல் எடை, பி.எம்.ஐ, இடுப்பு சுற்றளவு, இன்சுலின் எதிர்ப்பு, உடல் கொழுப்பு சதவீதம் போன்றவற்றில் குறைக்க உதவுகின்றது.

நாள் ஒன்றுக்கு ஒரு முழு ஆப்பிளை எடுத்துகொள்வதன் மூலம் எடை இழப்பை பெறலாம். இதை காலை உணவு அல்லது மதிய உணவுக்கு முன் சாப்பிடலாம்.

தினமும் அரை கப் மாதுளை எடுத்துகொள்வது நல்லது. மாதுளை கொண்டு சாலட்கள் சேர்க்கலாம். இதை பழச்சாறாக்கியும் கொடுக்கலாம். இதில் இருக்கும் அந்தோசயின்கள், டானின்கள், பாலிபினால்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் கொழுப்பை குறைப்பதற்கான சரியான தீர்வாக அமையும்.

வாழைப்பழத்தை ஸ்மூத்தியாக அல்லது ஓட்மீலுடன் சேர்த்து சாப்பிடலாம். இது எடை இழப்பு அல்லது பராமரிப்பை ஊக்குவிக்கும்.

செரிமானத்தை மேம்படுத்தவும், கொழுப்பு முறைவை தூண்டவும் தினமும் ஒரு கப் அன்னாசி பழத்தை எடுத்துகொள்ளுங்கள். விரைவான எடை இழப்புக்கு அன்னாசி உதவும். இந்த பழங்களை உணவின் ஒரு பகுதியாக மாற்றுங்கள். தினமும் ஒரு முழு பழத்தை எடுத்துகொள்வதன் மூலம் உங்கள் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க செய்யலாம்.

ஒவ்வொரு மாற்று நாட்களிலும் 6 முதல் 8 ஸ்ட்ராபெர்ரி வரை ஸ்மூத்தியாக்கி சாலட்கள், ஓட்ஸ் என சிற்றுண்டியாக எடுக்கலாம். இதனை எடுத்துகொள்வதன் மூலம் இதய நோய், டைப் 2 நீரிழிவு, உடல் பருமன் மற்றும் நரம்பு பிரச்சனைகள் உண்டாவதை தடுக்கிறது.

கிவி பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் இருக்கும் நச்சுக்களை குறைக்க செய்கிறது. பழத்தில் இருக்கும் நார்ச்சத்து சரியான செரிமானத்துக்கு உதவுகிறது. இதை தினசரி எடுத்துகொள்ள வேண்டியதில்லை. வாரத்துக்கு ஒரு கிவி பழத்தை எடுத்துகொள்வதன் மூலம் உடல் எடை இழப்பும் சாத்தியமாகும்.