பப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகளா !!!!

எல்லா காலங்களிலும் கடைகளில் கிடைக்கும் பப்பாளி பழம் உடலுக்கு பல நன்மைகள் தருகின்றது.

பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்

பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.

நரம்புகள் பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடலாம்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.

பப்பாளிக்காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒருவகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.