தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வெள்ளிக்கிழமையன்று, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

தமிழகத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று, தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, சிவகங்கை, விருதுநகா், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய கூடும்.