தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் இன்று நீலகிரி சேலம் தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

காற்றின்‌ இசை வேகமாறுபாடு மற்றும்‌ வெப்பசலனத்தின்‌ காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று கோயம்புத்தூர்‌, நீலகிரி, சேலம்‌, தருமபுரி, கள்ளக்குறிச்சி,விழுப்புரம்‌, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு‌.

நாளை மேற்கு தொடர்ச்‌ மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர்,‌ தேனி,திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌ என அறிவிப்பு.

மேலும் வரும் 7ம் தேதி மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய நீலகிரி, கோயம்புத்தூர்‌ தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. வரும் 08 ஆம் தேதி மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய நீலகிரி, கோயம்புத்தூர்‌ தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்கள்‌, வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவிப்பு‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ இல பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌. அரபிக்கடல் பகுதியில் இன்று முதல் வருகின்ற எட்டாம் தேதி வரை காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.