சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படாது அதிகாரி உறுதி

பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு நடத்தியபோதிலும் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படாது அதிகாரி உறுதி சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொருளாதார பாட தேர்வு, கடந்த மார்ச் 26-ந் தேதி நடைபெற இருந்தது.

ஆனால், அதற்கு 3 நாட்கள் முன்கூட்டியே, கேள்வித்தாள் ரகசியமாக வெளியானது. இதனால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.

கடந்த 25-ந் தேதி, அப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த மறுதேர்வு காரணமாக, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆனால், தாமதம் ஏற்படாது என்று சி.பி.எஸ்.இ. அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு தேவைக்கு அதிகமாகவே ஆட்களை நியமித்து இருப்பதாகவும், எனவே, உரிய நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.