பாட புத்தகத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள்! - மாணவர்

பாட புத்தகத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள்! – மாணவர் நலனுக்காக தமிழகத்தில் அறிமுகம்

பாட புத்தகத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள்! - மாணவர்

பாட புத்தகத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள்! – மாணவர் நலனுக்காக தமிழகத்தில் அறிமுகம் தமிழக அரசின், புதிய பாட திட்டப்படி, ஒவ்வொரு பாட புத்தகத்திலும், அந்த படிப்புக்கான வேலைவாய்ப்பு தகவல்கள் இடம்பெற உள்ளன.

மேலும், அந்த துறைகளில் சாதித்த வர்களின் விபரமும் சேர்க்கப்பட உள்ளது. வேறுஎந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், புதுமையாக, தமிழகபள்ளிப் பாட புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

பள்ளி, பாட, புத்தகத்தில், வேலை வாய்ப்பு, தகவல்கள்! , மாணவர், நலனுக்காக ,தமிழகத்தில், அறிமுகம் மாற்றம் :தமிழக பள்ளி கல்வித்துறையில், 13 ஆண்டு களுக்கு பின்,பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு உள்ளன.

பள்ளிகல்வி அமைச்சர், செங்கோட்டையன் முயற்சியில், தமிழக பாடத் திட்டங்கள், சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய பாடத்தை மிஞ்சும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன.

பள்ளிக் கல்வித்துறை முதன்மைசெயலர், பிரதீப் யாதவ், செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், கல்வியாளர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், புதிய பாட திட்டத்தை உருவாக்கினர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி தலைமையிலான குழுவினர், புத்தகங்களை தயாரித்துள்ளனர்.

வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது.

இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்பு களுக்கு, முதல் பருவ தேர்வுக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

புதிய பாடத்திட்ட புத்தகங்களில், கண்ணை கவரும் வண்ணங்களுடன், பக்கத்துக்கு பக்கம் சித்திரம், ‘பார்கோடு’ மற்றும், இணையதள வீடியோ இணைப்பு என, அசத்தலான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

பிளஸ் 1 புத்தகத்தில், கூடுதல் அம்சமாக, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், வேலைவாய்ப்பு குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பாட புத்தகத்திலும், அந்த பாடத்தை படித்தால்,என்னென்ன மேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன; அவற்றை படித்தால், எந்தெந்த வேலை வாய்ப்புகளை பெறலாம் என்ற, விரிவான விபரங் கள், புத்தகத்தின் முகப்புரையாக தரப்பட்டுள்ளன.

மேலும், அந்த படிப்புகளை படித்து, அத்துறை களில் சாதனை படைத்தோர் பற்றிய முழு விபரங்களும் தரப்பட்டுள்ளன.

இதனால், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போதே, மாணவர் கள், தங்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான படிப்பு வகைகளை அறிந்து, திட்டமிடலாம்.

இந்த தகவல்களை பயன்படுத்தி, மாணவர்கள், கல்வி ஆண்டின்துவக்கம் முதல் தேர்வு வரை, லட்சியத்துடன் படித்து, அதிக மதிப்பெண் பெற முடியும்.

அடுத்து என்ன படிக்கலாம் என்பதை திட்ட மிடவும் உதவும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.