டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்களை வென்ற நிலையில், ஈட்டி எறிதலில் 7வது பதக்கத்தை தங்க பதக்கமாக வென்று கொடுத்துள்ளார் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா, இறுதி போட்டியின் முதல் சுற்றில் 87.03 மீட்டர் தூரம் வீசினார். 2வது சுற்றில் 87.58 மீட்டர் தொலைவிற்கு வீசினார். 3வது சுற்றில் 76.79 மீட்டர் தூரத்திற்கும் வீசினார். 6 சுற்றுகளிலும் நன்றாக வீசினார் நீரஜ் சோப்ரா. 6 சுற்றுகளிலும் எந்த நாட்டு வீரரும், 2வது சுற்றில் நீரஜ் சோப்ரா வீசிய 87.58 மீட்டர் தூரத்திற்கு வீசவில்லை. எனவே அதிக தொலைவிற்கு வீசிய நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் கூட வெல்லவில்லை என்ற இந்தியாவின் குறையை தீர்த்துவைத்தார் நீரஜ் சோப்ரா