தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் உணவு பாதுகாப்பு சேவைகளில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் உணவு பாதுகாப்பு சேவைகளில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 30.11.2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆய்வக தொழில்நுட்பவியலாளர் (Laboratory Technician)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 19

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேதியியல் அல்லது உயிர் வேதியியல் படித்திருக்க வேண்டும். மற்றும் Diploma in Medical Laboratory Technician Course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.35,400 – 1,12,400

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும், டிகிரி மற்றும் டிப்ளமோ மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2021/LT_Grade_II_TNFSSS_09112021.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்