8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவக்கால பணியிடத்திற்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் உள்ளிட்ட 141 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம்: திருச்சி அரசு நுகர்பொருள் வாணிபக்கழகம் (TNCSC)

மொத்த காலிப் பணியிடங்கள் : 141

பணி: பட்டியல் எழுத்தர் – 54 
தகுதி : ஏதாவதொரு பிரிவில் இளநிலை அறிவியல் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 2,410 + அகவிலைப்படி

பணி: Assistant – 52 
தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. ரூ.2,359 + அகவிலைப்படி

பணி: Security, Watchman – 35 
தகுதி: 8 ஆம் வகுப்பு தேச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. ரூ.2,359 + அகவிலைப்படி
வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32,37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : திருச்சி மாவட்டத்தினை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடம் இருந்து உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், நீதிமன்ற வளாகம், திருச்சிராப்பள்ளி – 620 001 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 30.11.2021

மேலும் விபரங்கள் அறிய www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை தெரிந்துகொள்ளவும்