ஊதிய முரண்பாடு கோரிக்கைகளை மே 15-க்குள் அளிக்கலாம்

ஊதிய முரண்பாடு கோரிக்கைகளை மே 15-க்குள் அளிக்கலாம் எம்.ஏ.சித்திக் குழு அறிவிப்பு

ஊதிய முரண்பாடு கோரிக்கைகளை மே 15-க்குள் அளிக்கலாம்

ஊதிய முரண்பாடு கோரிக்கைகளை மே 15-க்குள் அளிக்கலாம் எம்.ஏ.சித்திக் குழு அறிவிப்பு | அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் குறித்த கோரிக்கைகளை மே15-ம் தேதிக்குள் ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தலைமையிலான ஒரு நபர் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன.

இந்நிலையில், 6-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோதே பல்வேறு பணி நிலைகளில் ஊதிய முரண்பாடுகள் இருப்பதாகவும் அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து, நிதித் துறை செலவின பிரிவு செயலாளர் எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்தக் குழு தனது பணியை சமீபத்தில் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை பெற்று, அவற்றை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி உள்ளது. நேரிலோ, தபாலிலோ.. இந்லையில், ஒரு நபர் குழு தலைவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஊதிய முரண்பாடுகளை களைய எம்.ஏ.சித்திக் தலைமையில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு, ஊதிய முரண்பாடு தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறது.

கோரிக்கை மனுக்களை நேரிலோ தபால் மூலமோ அல்லது ‘omc_2018@tn.gov.in’ என்ற மின்னஞ்சல் முகவரியிலோ மே 15-ம் தேதி முன்னதாக அனுப்ப வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. | DOWNLOAD