சுருக்கெழுத்து பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

சுருக்கெழுத்து பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

சுருக்கெழுத்து பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

சுருக்கெழுத்து பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு மத்திய அரசின் தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம் சார்பில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு சுருக்கெழுத்து பயிற்சி அளிப்பதற்கு ஆர்வமுள்ள நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் வேலைவாய்ப்பு தலைமை இயக்குநரின்கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 60 பேருக்கு சுருக்கெழுத்து பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்தப் பயிற்சியை வழங்க விரும்பும் பயிற்சி நிலையங்கள், பயிற்சி நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தெரிவு செய்யப்பட்ட பயிற்சி நிறுவனத்துக்கு ஒரு விண்ணப்பதாரருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.800 வீதம் கட்டணம் வழங்கப்படும்.

ஆர்வமுள்ள பயிற்சி நிறுவனங்கள் எண். 56, சாந்தோம் நெடுஞ்சாலை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் கட்டடம், 3 ஆவது மாடி, சென்னை 600 004 என்ற முகவரியில் இயங்கி வரும் ஆதிதிராவிடர்,

பழங்குடியினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் (தொலைபேசி எண்: 044 24615112) துணை மண்டல வேலைவாய்ப்பு அதிகாரிக்கு வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.