கோடை விடுமுறைக்கு பின் வரும் ஜூன் 1ந் தேதியன்று பள்ளிகள்

கோடை விடுமுறைக்கு பின் வரும் ஜூன் 1ந் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

கோடை விடுமுறைக்கு பின் வரும் ஜூன் 1ந் தேதியன்று பள்ளிகள்

பள்ளிகள் துவங்கும் தேதி அறிவிப்பு! புதிய பாடத்திட்டம் காரணமாக பள்ளிகள் துவக்க தேதியை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

மே 2ந் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை துவங்கும்! கோடை விடுமுறைக்கு பின் வரும் ஜூன் 1ந் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் 1-ந் தேதி திறப்பு வருகிற 21-ந் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஆனால் பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி திறக்கப்படும்.

அதற்கு முன்னதாக வருகிற 2-ந் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் புகார் அளிக்கலாம்.

அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் வகுப்புகள் தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இதுதவிர 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

இதற்காக ரூ.463 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிக்கூடங்களில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கப்படும்.

அதேபோல் அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் பள்ளிக்கூடங்கள் திறந்ததும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.